தமிழகத்தை வாட்ட காத்திருக்கும் கோடை! – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

Webdunia
ஞாயிறு, 28 பிப்ரவரி 2021 (12:06 IST)
மார்ச் மாதம் முதலாக தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில் பல மாவட்டங்களில் வழக்கத்திற்கு அதிகமான வெப்பம் நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பருவமழை காலம் முடிந்து குளிர்காலம் நடந்து வரும் நிலையில் மார்ச் மாதத்தை தொடர்ந்து கோடைக்காலம் தொடங்க உள்ளது. ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் முக்கிய நகர பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழகத்தின் சில மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மதுரை, திருச்சி, சேலம், வேலூர், நாமக்கல், திருவள்ளூர், கரூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வழக்கத்தைவிட 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்