உடுமலை சங்கர் வழக்கின் தீர்ப்பு ஏமாற்றத்தை அளிக்கிறது.: பா. ரஞ்சித்

திங்கள், 22 ஜூன் 2020 (14:15 IST)
உடுமலை சங்கர் கொலை வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு சற்று முன்னர் வெளியான நிலையில் இந்த தீர்ப்பில் முதல் குற்றவாளியன கௌசல்யாவின் தந்தை சின்னசாமி என்பவர் விடுதலை செய்யப்பட்டார். அதேபோல் கௌசல்யாவின் தாய் விடுதலையை எதிர்த்து காவல்துறையினர் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் இந்த வழக்கிலிருந்து கௌசல்யாவின் தாய் தந்தை ஆகிய இருவருமே விடுதலை செய்யப்பட்டனர்
 
இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து இயக்குனர் பா ரஞ்சித் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: மிகவும் பதற்றத்தை உண்டாக்கிய உடுமலை சங்கரின் ஆணவப் படுகொலை வழக்கில் குற்றவாளிகளை நிரபராதிகள் என்று விடுவித்த உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. வழக்கை திறன்பட நடத்த இயலாத தமிழக அரசுக்கு கடும் கண்டனங்கள்!!
 
ஒரு புறம் மேலவளவு வழக்கை போல தண்டனை குற்றவாளிகளை தண்டனை காலத்திற்க்கு முன்கூட்டியே விடுதலை செய்கிறார்கள், இப்போது தண்டனை பெறாமலே ஆணவ கொலையை நிகழ்த்திய குற்றவாளிகளை விடுவிக்கிறார்கள். தமிழக அரசில் சமூக நீதி என்பதே கற்பனையா?
 
இம்மாதிரியான வழக்குகளின் தீர்ப்பு சமூக தளத்தில் பல நல்லுதாரணங்களை உண்டாக்க வேண்டும் என்பதே அனைவரின் தேவை, எதிர்பார்ப்பு. ஆனால் இந்த வழக்கில் பெற்ற தீர்ப்பு சமூக தளத்தில் உருவாக்கும் மனநிலையை யோசிக்கவே மனம் கவலை கொள்கிறது' என்று பா ரஞ்சித் கூறியுள்ளார்.
 
இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து ‘திரெளபதி’ பட இயக்குனர் ஜி மோகன் அவர்கள் கருத்து தெரிவித்தபோது, ‘தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்.. இறுதியில் தர்மமே வெல்லும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்