வெதர் அப்டேட்: இன்று 11 மாவட்டங்களில் கனமழை... எங்கெங்கு தெரியுமா?

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (13:02 IST)
இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக  தமிழகத்தில் அக்டோபர் 13 ஆம் தேதி வரை தொடர் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
 
அதன்படி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, குமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள், சேலத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்