தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

சனி, 9 அக்டோபர் 2021 (14:02 IST)
தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தகவல்.
 
வரும் 10 ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் 10 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிகப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேலும் இன்று நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்