திருவண்ணாமலையில் வாக்குச்சாவடி ஒன்றில் காய்ச்சல் உள்ள நபர்கள் பலர் வாக்களிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.
கொரோனா அறிகுறி மற்றும் தொற்று உள்ளவர்களும் வாக்களிக்க வேண்டும் என்பதால் அவர்கள் பாதுகாப்புடன் மாலை 6 மணிக்கு மேல் வந்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் திருவண்ணாமலையில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் காய்ச்சல் உள்ள சுமார் 20 பேர் ஒரே நேரத்தில் வாக்களிக்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கவச உடையான பிபிஇ கிட் அணிந்திருந்த நிலையில் 6 மணிக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர் என கட்டாயமாக அதிகாரிகள் கூறி விட்டதால் திரும்ப சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.