சசிகலாவின் முடிவு காலம் தாழ்ந்தது: திருமாவளவன்

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (16:48 IST)
சமீபத்தில் முடிவடைந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக வரலாறு காணாத வெற்றியைப் பெற்ற நிலையில் இன்னொரு பக்கம் அதிமுக வரலாறு காணாத தோல்வியை தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனால் சோர்ந்து போயிருக்கும் அதிமுக தொண்டர்களுக்கு குஷிப்படுத்தும் வகையில் சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக கூறப்பட்டது. இதனையடுத்து இன்று காலை எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சமாதியில் மரியாதை செய்த சசிகலா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் கட்சியை காப்பாற்றுவார்கள் வேண்டும் என் மனக்குமுறலை ஜெயலலிதாவுடன் கூறியிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் அதிமுகவை சசிகலா கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா சென்றது தனிப்பட்ட விவகாரம் என்றும் ஆனால் அவரது நடவடிக்கையை வரவேற்கிறேன் என்றும் இருப்பினும் அதிமுகவை கைப்பற்ற சசிகலாவின் முடிவு காலம் தாழ்ந்தது என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்