ஆவடியில் இருந்து திருப்பதிக்கு பேருந்து: இன்று முதல் சேவை தொடக்கம்!

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (16:45 IST)
ஆவடியில் இருந்து நேரடியாக திருப்பதிக்கு பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையிலிருந்து ஆவடி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் சென்னையிலேயே முழுமையாக நிரம்பி விடுவதால் ஆவடியில் இருந்து திருப்பதி செல்பவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே ஆவடி பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஆவடியில் இருந்து திருப்பதி பேருந்து சேவை இயக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வந்தது. 
 
இந்த நிலையில் இந்த கோரிக்கையை தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. ஆவடியில் இருந்து நேரடியாக திருப்பதிக்கு பேருந்து இயக்கும் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்