நானே வருவேன் படத்தில் இணைந்த முன்னணி காமெடியன்!

சனி, 16 அக்டோபர் 2021 (16:18 IST)
நடிகர் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தில் யோகி பாபு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

இயக்குநர் செல்வராகவன்,தனுஷ், யுவன்சங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் புதிய படம் நானே வருவேன். சுமார் பத்தாண்டுகளுக்குப் பிறகு மூவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றவுள்ளனர், புதுப்பேட்டை படத்திற்குப் பிறகு இவர்கள் இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்துக்கான திரைக்கதை மற்றும் பாடல் மெட்டமைப்பது ஆகிய பணிகளில் செல்வராகவன் ஈடுபட்டு வந்தார்.

ஆகஸ்ட் மாதமே தொடங்க இருந்த படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டு வந்த நிலையில் இப்போது இன்று தொடங்கியுள்ளது. இதையடுத்து இன்று படத்தின் புதிய போஸ்டரை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரவெல்லாம் நடிக்கிறார்கள் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது முக்கியமான  கதாபாத்திரத்தில் யோகி பாபு படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்