அரசின் செயல்முறை சிறப்பாக உள்ளது. வெள்ள நிவாரண பணி குறித்து திருமாவளவன்..!

Webdunia
சனி, 9 டிசம்பர் 2023 (13:35 IST)
கடந்த காலங்களில் செய்யப்பட்ட வெள்ள நிவாரண பணிகளை விட தற்போது அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என சென்னை வெள்ள நிவாரண பணி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 
 
அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் வரலாறு காணாத மழை பொழிவால் பாதிப்பு அதிகம் ஏற்பட்டுள்ளது என்றும் மீட்பு பணிகள் சிறப்பாக இருந்தாலும் 47 ஆண்டுகள் இல்லாத தொடர் கனமழையால் வெகுவாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் கடந்த காலங்களை விட இந்த முறை அரசியல் செயல்பாடு சிறப்பாக உள்ளது என்று தெரிவித்தார். இந்த நிலையில் தமிழ்நாட்டை வழக்கம் போல் மத்திய அரசு வஞ்சிக்கிறது என்றும் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு 5000 கோடி கேட்டால் மத்திய அரசு ஆயிரம் கோடி கொடுக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்