கர்நாடக மாநிலத்தில் இன்னும் ஒரு வாரத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
கர்நாடக மாநிலத்தில் மே பத்தாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிரமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரு கட்சிகளும் மாறி மாறி இலவச அறிவிப்புகளை தங்களது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளனர் என்பதும் இதனால் மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அங்குள்ள சாந்தி நகர் என்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹரிஷ் என்பவரை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்யப் சென்ற போது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது