முதலமைச்சர் படம் இல்லாத நல்லாசிரியர் விருது சான்றிதழ்!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (11:19 IST)
தமிழகத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழில் முதலமைச்சரின் படம் இடம்பெறவில்லை.

தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தில் சிறப்பாக செயல்ப்பட்ட ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும். 2007 ஆம் ஆண்டு முதல் இதற்காக வழங்கப்படும் சான்றிதழ்களில் முதலமைச்சரின் படம் இடம்பெறும். ஆனால் இந்த முறை முதல்வர் ஸ்டாலினின் படம் இடம்பெறவில்லை. இது சம்மந்தமாக சான்றிதழின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்று முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்