மகளிர் உரிமைத்தொகை கிடைப்பதில் சிக்கலா? குடும்பத்தலைவிகள் அதிர்ச்சி..!

Webdunia
வியாழன், 26 அக்டோபர் 2023 (08:04 IST)
மகளிர் உரிமைத்தொகை திட்ட பணிகள் இன்று முதல் புறக்கணிப்பு  என வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தெரிவித்துள்ளதால் மகளிர் உரிமைத்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் குடும்பத்தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர் சங்கம் இன்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளது. மேலும் மாலை 4.45 மணிக்கு அலுவலகங்களில் இருந்து வெளிநடப்பு செய்து மாவட்ட தலைநகரில் ஆர்ப்பாட்டம்
செய்ததால் பரபரப்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் (TNROA) அக்டோபர் 26ம் தேதி முதல் உரிமைத் திட்டம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் காலவரையின்றி புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருப்பதால் மகளிர் உரிமைத்தொகை சரியான நேரத்திற்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
 
மகளிர் உரிமை தொகை குறித்த அனைத்து பணிகளை அலுவலர்கள் புறக்கணித்தால், உரிமை தொகை மேல்முறையீடு உள்ளிட்ட விவகாரங்களின் பணிகள் முடங்கும் என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்