ஈஷா மையத்தில் திருட்டு- 2 ஊழியர்கள் கைது

Sinoj
வியாழன், 11 ஜனவரி 2024 (13:50 IST)
கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா மையத்தில் மின்சார சாதனங்கள் திருடப்பட்டதாக அளித்த  புகாரில் ஊழியர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற இடம் ஈஷா யோக மையம். இந்த மையத்தின் ஸ்டோர் பொறுப்பாளராக சச்சிதானந்தன் இருந்த நிலையில், இவர் அங்கு பணியாற்றும் 21 ஊழியர்கள் மூலம் பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாகத் திருடி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, ஈஷா மையம் சார்பில் இவர்கள் 22 பேர் மீது  நடவடிக்கை எடுக்கும்படி போலீஸில் புகாரளிக்கப்பட்டது.

இப்புகாரின் அடிப்படையில், ஆலாந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து சச்சிதானந்தன் மற்றும் ஊழியர் வெங்கடேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்