கோவை பகுதியில் மக்கள் வாழும் பகுதிகளில் புகுந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறையினர் ஒருவழியாக பிடித்துள்ளனர்.
கோவை, நீலகிரி காட்டுப்பகுதிகளில் நிறைய யானைகள் உள்ள நிலையில் சில சமயம் ஒற்றை காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது அடிக்கடி நடைபெறுகிறது. இதற்கு முன்னால் இதுபோல ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த அரிசிக் கொம்பன், பாகுபலி உள்ளிட்ட யானைகளை தொடர்ந்து தற்போது ரோலக்ஸ் என்ற காட்டு யானை பிடிபட்டுள்ளது.
கோவை மாவட்டம் நரசிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் வாகனங்களை வழிமறிப்பது, ஊருக்குள் செல்வது, விவசாய நிலங்களை நாசம் செய்வது என அட்டகாசம் செய்து வந்த ரோலக்ஸ், வனத்துறையிடம் சிக்காமல் போக்குக்காட்டி வந்தது.
இதனால் ரோலக்ஸை பிடிக்க பிரபல கும்கி யானை சின்னத்தம்பி உள்பட 4 கும்கி யானைகள் களமிறக்கப்பட்டன. அவற்றை வைத்து ரோலக்ஸை சுற்றி வளைத்த வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி ரோலக்ஸை பிடித்தனர்.
Edit by Prasanth.K