பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன் இளம் பெண்களை பாலியல் வீடியோ எடுத்து மிரட்டியதாக திருநாவுக்கரசு, நாகராஜ், சபரிராஜ், செந்தில் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு சிபிசிஐடி போலிஸ் விசாரணைக்கு இவ்வழக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள அத்துணை விஐபிகளையும் கைது செய்ய வேண்டும் என்று இப்போது பொள்ளாச்சியில் மாணவ - மாணவிகள் மனித சங்கிலி அமைத்து போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கு போலிஸார் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தி ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர்ர்.
அப்போது சில மாணவர்களை பிடிக்க கைது செய்ய போலீஸார் முயன்ற போது, மாணவர்களை சூழ்ந்து வேலி போல அமைத்து போலீஸார் பிடிக்காமல் காப்பாற்றினர் ,