திருச்செந்தூர் கடற்கரையில் திடீரென உள்வாங்கிய கடல்.. பக்தர்களுக்கு எச்சரிக்கை..!

Siva
ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (16:05 IST)
திருச்செந்தூரில் திடீரென 500 மீட்டர் வரை கடல் உள்வாங்கியதால் பக்தர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வருகை தருவார்கள் என்பதும் குறிப்பாக கடலில் புனித நீராடுவது வழக்கமாக உள்ளனர் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இன்று பௌர்ணமியை ஒட்டி திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் திடீரென 500 மீட்டர் தூரத்திற்கு திருச்செந்தூர் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கடலில் உள்ள பாறைகள் வெளியே தெரிய தொடங்கியதால் பக்தர்கள் அதனை ஆச்சரியத்துடன் பார்த்து புகைப்படங்கள் மற்றும் வீடியோவை எடுத்தனர்.

அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் பொதுவாக திருச்செந்தூர் கடலில் உள்வாங்கி விட்டு, பின் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் இன்று பௌர்ணமி தினம் என்பதால் கடல் நீர் உள்வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்  திருச்செந்தூர் கடற்கரையில் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியுள்ளதால் பாதுகாப்பு பணியில் உள்ள கடற்கரை பணியாளர்கள் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்கும்படி எச்சரிக்கை வருகின்றனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்