கடந்த சில நாட்களாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஜூலை 29ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஆகஸ்ட் தங்கப் பல்லக்கு, தேரோட்டம், ஆடிப்பூரம், ஆடித்தபசு, திருக்கல்யாணம், திரு ஊஞ்சல், மஞ்சல் நீராடல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்த நிலையில் இன்று ஆடி திருக்கல்யாண திருவிழாவின் நிறைவு நாளில் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜை, சாயரட்சை பூஜை, கால பூஜைகள் நடைபெற்றது
இதனையடுத்து காலை 6 மணியளவில் ராமநாதசுவாமி, பிரியாவிடை, பர்வதவர்த்தினி அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் தங்க கேடயங்களில் ராமநாதசுவாமி கோயிலிருந்து புறப்பட்டு, கெந்தமாதன பர்வதம் மண்டகப் படியில் எழுந்தருளல் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது.