சசிகலாவின் தயவால் ஆட்சி நடக்கிறது: தினகரன்

Webdunia
சனி, 22 செப்டம்பர் 2018 (12:04 IST)
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் அ.ம.மு.க  துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கலந்து கொண்டார்.
 

அங்கு ஏராளமான மக்கள் அவரது பேச்சைக் கேட்க கூடியிருந்தனர் அப்போது அவர் பேசியதாவது:

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரைச் சொல்லி போலியான ஆட்சி நடக்கிறது. அம்மா ஆட்சியில் இருந்தவரை மக்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கிற எந்த ஒரு திட்டத்தையும் அனுமதித்தது இல்லை.

தற்போது நடக்கிற ஆட்சியில் சேலம் பசுமை வழி நெடுஞ்சாலை திட்டம் ,விவசாயத்தை பாதிக்கின்ற மீத்தேன், நியூட்ரினோ ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் நடைமுறைப்படுத்தி மத்திய அரசின் உத்தரவை ஏற்று செயல்படுத்துபவர்களாக உள்ளனர் என்று கூறினார்.

மேலும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.மறைவிற்கு பிறகு அவரது மனைவி ஜானகியம்மாவாள் கூட புரட்சி தலைவரின் ஆட்சியை கொடுக்க முடியவில்லை. ஆனால் தமிழகத்தில் இன்று அம்மாவின் ஆட்சி தொடர்ந்து நடைபெற சின்னம்மா அவர்கள் தான் காரணம். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்