த்ரிஷாவுடன் ரஜினியின் பிளாஷ்பேக்: பேட்ட அப்டேட்

வியாழன், 20 செப்டம்பர் 2018 (20:44 IST)
நடிகர் ரஜினி தற்போது பேட்ட படப்பிடிப்புக்காக லக்னோவில் இருக்கிறார். 45 நாள்கள் படப்பிடிப்பு நடக்கிறது, இதில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ரஜினி - விஜய் சேதுபதி ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே படமாக்கி வருகிறார்.
 
அடுத்து, காசியில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதில் ரஜினி, த்ரிஷா பங்கேற்கும் காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளார்கள். ரஜினி - த்ரிஷா இடம்பெறும் காட்சிகள் பேட்ட படத்தின் முக்கிய ப்ளாஷ் பேக் காட்சி என்கிறார்கள். 
 
டார்ஜிலிங்கில் நடந்த முதல் ஷெட்யூல் படப்பிடிப்பில் பாபி சிம்ஹா இருந்தார். அடுத்ததது டேராடூனில் சிம்ரன் இருந்தார். இப்போது விஜய் சேதுபதியுடன், அடுத்தது திரிஷாவுடன் என பேட்ட காட்சியில் ரஜினி பிஸியாக உள்ளார்.  
 
இடையில் 5 நாட்கள் சென்னை வரும் அவர் மன்ற பணிகளிலும் செயல்பட உள்ளார். ஒரு பக்கம் பிஸியாக நடித்தாலும், கட்சி விஷயங்களில் மிக கவனமாக, ஒவ்வொரு அரசியல் நிகழ்வையும் கவனித்து வருகிறாராம். 
 
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குள் நிச்சயம் ரஜினி அதிரடியான முடிவை எடுப்பார் என ரசிகர்கள் நம்புகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்