சடலத்தினை தரதரவென்று இழுத்து சென்ற மீட்புக்குழுவின் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது – மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா ?
குளித்தலை காவிரி ஆற்றில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் 46 மணிநேரத்திற்கு பின் இறந்த நிலையில் சடலமாக நேற்று மீட்கப்பட்டார். இந்த இளைஞரின் சடலத்தினை தனியார் அமைப்புகள் கண்டறிந்து அந்த சடலத்தினை தரதரவென்று தண்ணீரில் இழுத்து வந்த காட்சிகளும், அவர்களே அதை யூடியூப்பில் பதிவேற்றியுள்ள காட்சிகள் தற்போது வைரலாகி வரும் நிலையில், தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் முதல் தொகுதியிலேயே இந்த அவலநிலையா ? என்று விமர்சனம் எழுந்துள்ளது
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கழுகூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் சுரேந்தர் (18). இவர் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி தனது உறவினரின் பரிகார நிவர்த்திக்காக குளித்தலை கடம்பன் துறை காவிரி ஆற்றிற்கு வந்துள்ளார். அப்போது காவிரி ஆற்றில் ஆழமான பகுதியில் குளித்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த முசிறி தீயணைப்புத் துறையினர் நீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞரை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று 22 ம் தேதி காலை தண்ணீர்பள்ளி சாந்திவனம் காவிரி ஆற்றில் இறந்த நிலையில் சடலமாக முசிறி தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர்.
சுமார் 46 மணி நேரத்திற்கு பின் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
மேலும், குளித்தலைக்கு அக்கறையில் அதாவது ஆற்றினை கடந்து அமைந்துள்ள முசிறியிலிருந்து தீயணைப்புத்துறையினர் இதே பணியில் ஈடுபட்டு வருவதாலும், குளித்தலைக்கு என்று தனியாக தீயணைப்புத்துறை அலுவலகம் இல்லாதது தான் கால தாமதம் என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.
இதுமட்டுமில்லாமல், இந்த இளைஞரின் உடல் சடலமாக தண்ணீரில் தரதரவென்று இழுத்து செல்லப்பட்டு வந்த காட்சிகள் தற்போது வைரலாகி வரும் நிலையில், அதையே அந்த தனியார் சமூக நல ஆர்வலர்கள் அதனை யூடியூப்பில் பதிவேற்றம் செய்துள்ள காட்சிகளும் பெருமளவில் வைரலாகி வருகின்றது. இதுமட்டுமில்லாமல், திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் முதல்வர் கலைஞரின் முதல் தொகுதி குளித்தலை என்பதினால் மிகுந்த அளவில் விமர்சனம் எழுந்துள்ளது.