விடிவதற்குள் 21 மாவட்டங்களை குளிப்பாட்ட போகும் மழை! – வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick

ஞாயிறு, 2 ஜூன் 2024 (19:32 IST)
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்து வரும் நிலையில் அடுத்த 3 மணி நேரத்திற்கான மழை வாய்ப்பு அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.



தமிழ்நாட்டில் ஏப்ரல் முதலாக கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் மே மாதம் பாதியிலிருந்தே பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழையும் தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில், செங்கல்பட்டு, திருவள்ளூர், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருநெல்வேலி, கோவை, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 21 மாவட்டங்களில் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்