மக்களே உஷார்... 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?

Senthil Velan

வியாழன், 16 மே 2024 (14:14 IST)
இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை வைத்துள்ளது.
 
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் இன்று அநேக  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

ALSO READ: இந்தியாவில் வெப்ப அலையால் ஆண்டுக்கு 30 ஆயிரம் பேர் பலி..! உலகம் முழுவதும் எத்தனை பேர் தெரியுமா.?

மேலும் திருவாரூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்