சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தூத்துகுடி சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்தபோது பெரும்பாலானோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் அவர் கொடுத்த உதவிப்பணம் மற்றும் பொருட்களையும் சந்தோஷமாக பெற்று கொண்டனர்.
ஆனால் ஒரே ஒரு இளைஞர் மட்டும் 'யார் நீங்க', நூறு நாள் போராட்டம் செய்தபோது எங்கே இருந்தீங்க' என்று கேள்வி கேட்டார். இந்த கேள்வியை 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிட அரசியல்வாதிகளை கேட்காமல் உதவி செய்ய வந்தவரை கேட்டது முரண்பாடாக கருதப்பட்டாலும் இந்த வாலிபர் ஒரே நாளில் சமூக வலைத்தளங்களில் ஹீரோவாக மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் இந்த வாலிபர் பெயர் சந்தோஷ் என்றும் இவர் சீமான் ஆதரவாளர் என்றும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்திகள் பதிவாகி வருகின்றது. மேலும் தேசிய கொடியை எரித்து கைதான ஒருவருடன் இவர் இருக்கும் புகைப்படத்தையும் நெட்டிசன்கள் பதிவு செய்து சரமாரியாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்கள் உண்மைதானா? இவர் சீமான் கட்சியை சேர்ந்தவர்தானா? என்பது போகப்போக தெரியவரும்