கைலாசா நாட்டிலிருந்து வீடியோக்கள் மூலம் அவர் தொடர்ந்து தனது கருத்துக்களை வெளியிட்டு வந்த நிலையில், சமீபகாலமாக அவரது உடல்நிலையில் சிக்கல்கள் இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. தற்போது அவரது சகோதரி மகன், நித்யானந்தா உயிரிழந்ததாக அறிவித்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் அவரது அறக்கட்டளைக்கு சொந்தமான ₹4000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிப்பது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் அவர் உண்மையில் உயிரிழந்தாரா? இல்லையா? என்ற கேள்விக்கு உறுதியான பதில் இன்னும் வெளிவராத நிலையில், இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாக முடங்கியிருக்கிறது.