ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி கைலாசநாதர் திருக்கோயிலில், கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றது. அங்கிருந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்யும் போது, திடீரென சிவலிங்கத்தில் ஒற்றைக்கண் தோன்றியதால் பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
இதை பார்த்த பக்தர்கள் நெற்றிக்கண் திறந்ததாக கூறி, பரவசமடைந்து, "ஓம் நமச்சிவாயா" என்ற கோஷங்களை எழுப்பினர். இந்த தகவல் அப்பகுதியில் மிக வேகமாக பரவியதால், பக்தர்கள் வரிசையில் நின்று, சிவலிங்கத்தின் நெற்றிக்கண் திறந்த காட்சியை காண வந்தனர்.