பயணி தவறவிட்ட ரூ.15 ஆயிரத்தை நேர்மையுடன் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

Webdunia
வெள்ளி, 9 மார்ச் 2018 (16:56 IST)
ஆட்டோ டிரைவர் என்றாலே பல பயணிகள் ஒருமாதிரியாக பார்க்கும் நிலை இருந்து வரும் நிலையில் சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில் பயணம் செய்த பயணி ஒருவர் தவறவிட்ட 15 ஆயிரம் ரூபாயை போலீசிடம் ஒப்படைத்துள்ளார்

சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முத்துராஜ். சமீபத்தில் இவரது ஆட்டோவில் பயணம் செய்த ஒரு பயணி தான் கொண்டு வந்திருந்த ஹேண்ட்பேக்கை ஆட்டோவில் மறதியாக வைத்துவிட்டு இறங்கிவிட்டார்.

அந்த ஹேண்ட்பேக்கை சோதனை செய்து பார்த்த ஆட்டோ டிரைவர் அதில் ரூ.15 ஆயிரம் பணம், மொபைல் போன் மற்றும் சில உயிர் காக்கும் மருந்துகள் இருப்பதை பார்த்துள்ளார். உடனடியாக அந்த ஹேண்ட்பேக்கை அவர் அருகில் இருந்த காவல்நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். ஆட்டோ டிரைவரின் நேர்மையை காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர். நாமும் இந்த நேர்மையான ஆட்டோ டிரைவரை பாராட்டலாமே

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்