
இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் அவர் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய சுதந்திர போரில் பங்கேற்றவரும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மீது அன்பும் கொண்டவரான பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை அவரது ஊரான பசும்பொன்னில் இன்று நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.
இந்நிலையில் முத்துராமலிங்க தேவர் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களுக்குப் புனிதமான குரு பூஜையின் போது மனமார்ந்த அஞ்சலி செலுத்துகிறேன். நீதி, சமத்துவம் ஆகியவற்றுக்கும் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கிறது. கண்ணியம், ஒற்றுமை மற்றும் சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்ற அவர், சமூக சேவை செய்வதற்குக் கொண்டிருந்த அசைக்க முடியாத உறுதியுடன் ஆழ்ந்த ஆன்மீகத்தை இணைத்தார்” என கூறியுள்ளார்.
Edit by Prasanth.K