முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன் ஆகிய இருவரும் இன்று பசும்பொன்னுக்கு ஒரே காரில் பயணித்தது, தமிழக அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப்பார்க்கப்படுகிறது.
விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் இருக்கும் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த இருவரும் மதுரையில் இருந்து ஒரே வாகனத்தில் சென்றனர்.
அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில், இரு முக்கிய தலைவர்கள் தேவர் குருபூஜை நிகழ்வுக்காக இணைந்து பயணித்தது, கட்சியின் எதிர்கால ஒற்றுமைக்கான ஒரு திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.