சுயசார்புடன் தீபாவளியை பெருமிதமாக கொண்டாடுவோம்! - நாட்டு மக்களுக்கு பிரதமர் தீபாவளி வாழ்த்து!

Prasanth K

திங்கள், 20 அக்டோபர் 2025 (07:37 IST)

இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த பிரதமர் மோடி “140 கோடி இந்தியர்களின் கடின உழைப்பு, படைப்பாற்றல் மற்றும் புதுமைகளைக் கொண்டாடுவதன் மூலம் இந்தப் பண்டிகைக் காலத்தைக் கொண்டாடுவோம்.

 

இந்தியப் பொருட்களை வாங்கி, 'கர்வ் சே கஹோ யே சுதேசி ஹை!' என்று சொல்வோம்!

 

நீங்கள் வாங்கியதை சமூக ஊடகங்களிலும் பகிருங்கள். இதன் மூலம் மற்றவர்களும் இதைச் செய்ய ஊக்கமளிப்பீர்கள்” என தெரிவித்திருந்தார்.

 

இன்று தீபாவளி நாளில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள அவர் “தீபாவளி திருநாளில் வாழ்த்துக்கள். இந்த தீபத் திருநாள் நம் வாழ்வில் நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை ஒளிரச் செய்யட்டும். நம்மைச் சுற்றி நேர்மறை உணர்வு நிலவட்டும்” என தெரிவித்துள்ளார்.

 

ஆண்டுதோறும் தீபாவளியை ராணுவ வீரர்களோடு கொண்டாடும் பிரதமர் மோடி, இந்த ஆண்டும் அவ்வாறே கொண்டாட உள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்