மதுபானம் அருந்திய மாணவிகள் மீது நடவடிக்கை எடுத்த கல்லூரி முதல்வர் ~!

Webdunia
வியாழன், 7 ஏப்ரல் 2022 (22:26 IST)
பள்ளியில் படிக்கும் சில மாணவிகள் ஆண் நண்பர்களுடன் இணைந்து பீர் குடிக்கும் காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலான நிலையில் கல்லூரி முதல்வர்  மாணவிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்நிலையில், காஞ்ச்சிபும் அடுத்துள்ள ஏனாத்தூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயக்கி வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தக் கல்லூரியில் படிக்கும் சில மாணவிகள் வகுப்பறையில் உள்ள மேஜை மீது அமர்ந்து மதுபானத்தில் குளிர்பானம் குடித்துள்ளனர். இதை  சக  மாணவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இது இளைய தளத்தில் வைரலானது.

இந்த வீடியோ முதல்வரின் கவனத்திற்குச் சென்றது. இதுகுறித்து அவர் விசாரணை செய்தார். அதில், அந்த மாணவிகளுடன் படிக்கும் ஒரு மாணவர் மதுபானம் வாங்கிக் கொடுத்ததாக தெரியவந்தது. எனவே சுமார்  10 க்கும் மேற்பட்ட மாணவிகளை தற்காலிக இடை நீக்கம் செய்து உத்தர விட்டுள்ளார் . மேலும் மா ண்ஆவிகளின் பெற்றோர்களை       வரவழைத்து அவர்களுக்கு எச்சரித்திய விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்