பிரதமர் மோடியின் வருகையால் தமிழகத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அடுத்து கோவை, சேலத்துக்கு பிரதமர் மோடி வருகிறார், இது இன்னும் அதிக உற்சாகத்தை எங்களுக்கு தரும் என்றும் அவர் தெரிவித்தார்.
கூட்டணி கட்சிகளைவிட்டு தனியாக தொகுதிகளை அறிவிப்பது மரியாதையாக இருக்காது என்று அண்ணாமலை குறிப்பிட்டார். இந்தமுறை தமிழக தேர்தல் களம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது என கூறிய அண்ணாமலை, சவால் இருப்பது உண்மைதான் என்றும் அதையெல்லாம் எதிர்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.