ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா..! 3-வது முறையாக ஆட்சி அமைப்போம்.! பிரதமர் மோடி..!!

Senthil Velan

சனி, 16 மார்ச் 2024 (17:31 IST)
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
இந்தியாவில் 18- வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் மக்களவைத் தேர்தல் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
2024 லோக்சபா தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது என்றும் இந்த தேர்தலில் போட்டியிட பா.ஜ., - என்.டி.ஏ., முழுமையாக தயாராக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

நல்லாட்சி மற்றும் மக்கள் சேவையில் எங்களின் சாதனைகளின் அடிப்படையில் மக்கள் மத்தியில் செல்வோம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.  

ALSO READ: எந்தெந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக தேர்தல்..? முழு விவரம் இதோ..!!
 
140 கோடி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 96 கோடி வாக்காளர்களின் முழு அன்பையும் ஆசிர்வாதத்தையும் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் ஆட்சி அமைப்போம்  என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்