மயானத்திற்கு வயல் மற்றும் வாய்க்கால்கள் வழியே இறந்தவரின் உடலை எடுத்துச் சென்றது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!

J.Durai
புதன், 25 செப்டம்பர் 2024 (13:37 IST)
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் விபத்தில் உயிரிழந்த நிலையில் கடந்த 22- ஆம் தேதி  அவரின் உடலை நல்லடக்கம் செய்ய  மயானத்திற்கு செல்லும் சாலை போதிய வசதி இல்லாததால் வயல் மற்றும் மணிக்கரணை கூழவாய்க்காலில் தண்ணீரில் இறங்கியே அவரது உடல் சுடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
இதை போல் இந்த பகுதியில் இறந்த பலரின் உடல்களை சிறமத்துடனே கடந்து சென்று வருவதால்  மயான செல்ல முறையான  சாலை  கூழ வாய்காலில் பாலம் அமைத்துர  கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
இந்நிலையில் செய்தி வெளியானதை அடுத்து இன்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி,கோட்டாட்சியர் அர்ச்சனா மற்றும் அரசு துறை அதிகாரிகள் அந்த பகுதியை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
 
அப்பொழுது ஆட்சியரிடம் பேசிய பொதுமக்கள் பல ஆண்டுகளாக இந்த வழியாகவே இறந்தவரின் உடல்களை எடுத்துச் செல்வதாகவும் 300 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்த பகுதியில் வசித்து வருவதால் தங்களுக்கு மயானம் செல்ல முறையான சாலை வசதியும் வாய்க்காலில் பாலம் அமைத்து தரவும் கூறியதை அடுத்து , மாவட்ட ஆட்சியர் மயானம் செல்வதற்கு உரிய சாலை வசதியும் வாய்க்காலில் புதிய பாலம் கட்ட அதிகாரிகள் உடனடியாக பணிகளை தொடங்குமாறு உத்தரவிட்டார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்