விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு சிலை வைத்து வழிபாடு நடத்தி கொண்டாட மலைவாழ் பழங்குடி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு......

J.Durai

சனி, 24 ஆகஸ்ட் 2024 (09:21 IST)
கோவை மாவட்டம் ஆனைகட்டி சுற்று வட்டார பகுதிகளான தும்மனூர், செம்புகண்டி, ஜம்புகண்டி போன்ற 5  மலை கிராமங்களில் உள்ள நூற்றுக் கணக்கான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
 
நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியின் போது விநாயகர் வைத்து வழிபாடு நடத்தி கொண்டாடுவதை போன்று  மலை கிராமங்களில் நாங்களும் விநாயகரை வைத்து வழிபாடு நடத்தி கொண்டாட முடிவு செய்து உள்ளனர்.இது குறித்து தடாகம் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு அளித்தனர். இந்நிலையில் காவல் துறையினர் புதிதாக விநாயகர் வைத்து வழிபட உரிய அனுமதி பெற்ற பின்பு நடத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.
 
இதை அடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மலைவாழ் கிராமம் மக்கள் தாங்களும் விநாயகர் வைத்து வழிபாடு நடத்தி கொண்டாட அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.
 
மாநகரங்களில் வாழும் மக்கள் கொண்டாடுவது போன்று தாங்களும் தாங்கள் குழந்தைகளும் வழிபாடு நடத்தி கொண்டாடி மகிழ அனுமதி அளிக்கப்படுமா..? என எதிர்பார்ப்புடன் காத்து இருக்கும் மலை கிராமத்து பழங்குடியின மக்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்