திருமணம் நின்றாலும்…வெளியூரில் சிக்கி தவித்த பெண்ணை மீட்ட மணமகன் !

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (21:35 IST)
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள காஜிம்பிராம் நகரில் வசித்துவருபவர் சுதேவ். இவருக்கு கடந்த விழாயன் அன்று திருமணம் நடக்க இருந்தது. ஆனால், கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு  உத்தரவு போடப்பட்டுள்ளதால் திருமணம் நடக்கவில்லை.

அன்று, அவர், தமிழகத்தில், திருச்சி மாவட்டத்தில் படித்து வந்த ஒரு மாணவியை கேரளாவுக்கு ஒரு வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

அதாவது, மாணவியின் தாயார் நோய்வாய்ப்பட்ட நிலையில்,அவரைப் பார்க்க வேண்டி, ஊரடங்கு உத்தரவின்போது சிரமத்தை பொருட்படுத்தாமல் மாணவியை  மீட்டுள்ளார். அவருடைய செயலை மக்கள் பலரும் பாராட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்