''நாம் ஒருங்கிணைந்து இந்த சவால்களை முறியடிப்போம் ''- எடப்பாடியாருக்கு, கேரள முதல்வர் டுவீட்

சனி, 4 ஏப்ரல் 2020 (18:41 IST)
தமிழ்நாட்டில் இருந்து அனைத்து சாலைகளையும் தடுக்க கேரள அரசு முடிவு செய்துள்ளதாக வதந்திபரவுகிறது. இதுபோன்ற விசயத்தை நாங்களே நினைத்ததில்லை. அவர்கள் நம் அண்டை மாநிலத்தவர் அல்ல.அவர்களை நம்  சகோதரசகோதரிகளாகவே பார்க்கிறோம். என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில், கேரள மாநிலம், தமிழக மக்களை சகோதர சகோதரிகளாக அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நட்புறவும் சகோதரத்துவமும் என்றென்றும் வளரட்டும்! @vijayanpinarayi என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன்,தமிழக முதல்வருகு ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், கேரளா மற்றும் தமிழ்நாட்டிற்கு இடையேயான பரஸ்பர உறவானது கலாச்சாரம், சகோதரத்துவம் மற்றும் மொழி முதலியவற்றால் பின்னிப் பிணைந்தது ஆகும். இந்த ஆழமான பந்தத்தை புரிந்து கொள்ள இயலாதவர்கள் தான் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். நாம் ஒருங்கிணைந்து இந்த சவால்களை முறியடிப்போம் என தமிழக முதல்வர் பதிவிட்டிருந்த டுவீட்டை பதிவிட்டு  தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்