தன்னை கடித்த பாம்பை திரும்ப சிறுவன் ! மருத்துவர்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (20:38 IST)
சத்தீஸ்கர் மாநிலத்தில் தன்னை கடித்த பாம்பை திரும்ப சிறுவன் கடித்து அது உயிரிழந்தது.

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் என்ற பகுதியில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இது மலைப்பகுதி என்பதால், விலங்குகள் மற்றும் ஊர்வன ஆகியவற்றின் நடமாட்டம் அதிமுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சில நாட்களுக்கு மிஉன் அப்பகுதியைச் சேர்ந்த தீபம் ராம் என்ற 12 வயது சிறுவன்  நடந்து செல்லும்போது, ஒரு பாம்பு அவரை கடித்துள்ளது. இதில், கோபம் கொண்ட தீபக், திரும்ப பாம்பைக்கடித்துள்ளார்.

இதில், அந்தப் பாம்பு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்தச் சிறுவன் தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அவரைப் பரிசோதித்த  மருத்துவர்கள் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்