104 மணி நேர போராட்டம் - ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுவன் உயிருடன் மீட்பு!

புதன், 15 ஜூன் 2022 (10:53 IST)
ஆழ்துளை கிணற்றில் விழுந்து 80 அடி ஆழ பள்ளத்தில் சிக்கியிருந்த 10 வயது சிறுவன் ராகுல் சாஹு சுமார் 100 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு. 

 
சத்தீஸ்கர் மாநிலத்தில் பிஹ்ரிட் கிராமத்தில் 11 வயது சிறுவன் ராகுல் சாஹு கடந்த 10 ஆம் தேதி  பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சிறுவனை மீட்க மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர், உள்ளூர் படையினர் இறங்கினர். 
 
சுமார் சுமார் 104 மணி நேர போராட்டத்திற்கு பிறகு செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில் சிறுவன உயிருடன் மீட்கப்பட்டான். தகவல்களின் படி, மீட்புக் குழுவினர் ராகுலுக்கு மிக அருகில் சென்று இரவு 10.15 மணியளவில் அவரைப் பார்த்தனர். அவர் உயிரோடு இருப்பதையும் சுவாசிப்பதையும் அறிந்துக்கொண்டு மீட்பு பணியை அவசரப்படுத்தி சிறுவனை மீட்டுள்ளனர். 
 
ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதும் சிறுவன் மருத்துவமனைக்கு மாற்றவும், மேல் மருத்துவ சிகிச்சை அளிக்கவும் மருத்துவக் குழுக்களுடன் தயாராக் இருந்த ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டான். 
 
மீட்புப் பணிகளில் சுமார் 150 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மீட்பு பணியில் ரோபோக்கள் மற்றும் பிற வளங்கள் ஈடுபடுத்தப்பட்டன என்பது கூடுதல் தகவல். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்