தவறான புரிதல்: பெரியபாண்டியனுக்காக ஆரம்பிக்கப்பட்ட வங்கிக்கணக்கு மூடல்

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2017 (02:26 IST)
ராஜஸ்தான் மாநிலத்திற்கு நகை கொள்ளையர்களை பிடிக்க சென்ற சென்னை காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் அவர்கள் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தால் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி தமிழகமே அதிர்ச்சி அடைந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.1 கோடி நிதியுதவி அளித்து, அவருடைய மகன் கல்வி செலவையும் ஏற்றுள்ளது.

இந்த நிலையில் பலரும் காவல்துறையினர்களை தொடர்பு கொண்டு பெரியபாண்டியன் குடும்பத்திற்கு நிதியுதவி செய்ய விரும்பியதால் போலீசாரால் ஒரு வங்கிக்கணக்கு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இந்த வங்கிக்கணக்கு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பரவி வருவதால் தற்போது அந்த வங்கிக்கணக்கை காவல்துறையினர் மூடிவிட்டனர்.

இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், 'நல்லெண்ண அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட வங்கிக்கணக்கு பொதுமக்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிடக்கூடாது என்ற நோக்கத்தில் துவக்கப்பட்ட வங்கிக்கணக்கு மூடப்பட்டுவிட்டதாகவும், காவல்துறை அதிகாரிகள் உள்பட யாரும் இவ்வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டாமென்று கேட்டு கொள்ளப்படுவதகவும் சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்