சென்னை கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் சென்ற காவல்துறை ஆய்வாளர் பெரிய பாண்டியன் நேற்று ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இன்று அவரது உடல் ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது. சென்னையில் பெரியபாண்டியனின் உடலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி செலுத்துகிறார்