கோலாகலமாக தொடங்கிய தஞ்சாவூர் சித்திரை தேரோட்டம்! – குவிந்த பக்தர்கள்!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (10:29 IST)
புகழ்பெற்ற தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று தொடங்கி நடந்து வருகிறது.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக திருத்தேர் ஊர்வலம் நடைபெறாத நிலையில் இந்த முறை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

கடந்த மார்ச் 30ம் தேதி கொடியேற்றி சித்திரை திருவிழா தொடங்கப்பட்ட நிலையில், இன்று முக்கிய நிகழ்வான திருத்தேர் ஊர்வலம் தொடங்கியுள்ளது. தேரோட்டத்தின்போது முதலில் விநாயகர், அவரை தொடரந்து சுப்பிரமணியர், தியாகராஜர் உடன் அம்மன் திருத்தேர், தனி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு ராஜ வீதிகளான மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி, தெற்கு ராஜ வீதிகளில் செல்கின்றனர்.

இந்த தேர் ஊர்வலத்தை காண தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து கலந்து கொண்டுள்ள நிலையில், பலர் ஆர்வமுடன் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்