கேரளாவில் படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழந்தது தொடர்பாக படகு உரிமையாளர் கைது!
திங்கள், 8 மே 2023 (19:30 IST)
கேரளா மாநிலம் மலப்புரம் அடுத்துள்ள தானூர் அருகேயுள்ள ஆற்றில் நேற்று 40 பேருடன் சென்ற படகு விபத்திற்குள்ளான விவகாரத்தில் படகு உரிமையாளரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கேரளா மாநிலம் மலப்புரம் அடுத்துள்ள தானூர் அருகேயுள்ள ஆற்றில் நேற்று 40 பேருடன் சென்ற படகு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் குழந்தை உட்பட 22 பேர் உயிரிழந்தனர்.
இந்தப் படகில் 25 பேர்தான் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், 40 பேர் வரை சென்றதால், விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியானது.
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படகு விபத்து தொடர்பாக படகு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலோர பகுதியான தனூர் என்ற பகுதியில் படகின் உரிமையாளர் நாசர் இருந்த நிலையில், போலீஸார் அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.