ஆளுநர் பணியை தவிர அனைத்து பணிகளையும் செய்கிறார் ஆர்.என்.ரவி; அமைச்சர் தங்கம் தென்னரசு

வியாழன், 4 மே 2023 (18:52 IST)
ஆளுநர் பணியை தவிர மற்ற அனைத்து பணிகளையும் ஆர்.என்.ரவி செய்கிறார் என அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்து உள்ளார். 
 
மதச்சார்பற்ற நாட்டில் பொறுப்புள்ள பதவியில் இருப்பதை மறந்துவிட்டு ஆளுநர் பேச வேண்டாம் என்றும் எடுத்துக்கொண்ட பதவி பிரமாணத்தை மீறி பொதுவெளியில் நிர்வாக விவரங்களை ஆளுநர் பேசி வருகிறார் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். 
 
மேலும் ஆளுநர் சனாதன வகுப்பு எடுக்கிறார் என்றும் ஆரியத்திற்கு ஆலாபனை பாடுகிறார் என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 
 
சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டி அளித்த போது திராவிடம் மாடல் என்பது காலாவதி ஆகிவிட்டது என்றும் அதை மீண்டும் உயிர்த்தெழ வைக்க முயற்சி நடக்கிறது என்றும் திராவிட மாடல் என்பது ஒன்றுபட்ட பாரதத்திற்கு எதிரானது என்றும் அவர் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்