தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எதற்கு இந்தி? – தங்கம் தென்னரசு கண்டனம்

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (19:36 IST)
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்சி தொடங்குவதாக அறிவித்துள்ள திட்டத்திற்கு திமுக முன்னாள் அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி படிப்புகளுக்கு வகுப்புகள் புதியதாக தொடங்கப்பட இருப்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட தங்கம் தென்னரசு தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எதற்காக இந்தி கற்றுக்கொடுக்க வேண்டும் எனவும், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழ் வளர்ச்சி துறை தமிழ் அழிப்பு துறையாக மாறிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் நோக்கங்களை சிதைத்து விட்டு இந்திக்கு பட்டுக்கம்பளம் விரிப்பது துரோக செயல் என்றும், உடனடியாக இந்தி குறித்த அறிவிப்பை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்