இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த நிலையில், டிடிவி தினகரன், தங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விரைவில் நீக்கப்படுவார். அடிப்படை உறுப்பினர், தேனி மாவட்ட செயளாலர், அமமுக கொள்கை பரப்பு செயளாலர் ஆகிய பதவியில் இருந்தும் நீக்கப்படுவார் என தெரிவித்தார்.
அதோடு இந்த முடிவு எடுக்க என்ன காரணம் என்றும் குறிப்பிட்டார். தினகரன் கூறியதாவது, தங்க தமிழ்ச்செல்வன் பேச்சுகள், செயல்பாடுகள் சரியில்லை என புகார்கள் வந்தன. எனவே, தங்க தமிழ்ச்செல்வனை அழைத்து கண்டித்தேன்.
கொள்கை பரப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்க நேரிடும் என கடந்த 20 ஆம் தேதியே தங்க தமிழ்ச்செல்வனை எச்சரித்துவிட்டேன். இருப்பினும் அவர் ஊடகங்களில் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டு திரிகிறார்.
தங்க தமிழ்ச்செல்வன் விஸ்வரூபம் எடுக்க மாட்டார், பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவார். என்னை பார்த்தால் தங்க தமிழ்ச்செல்வன் பொட்டிப் பாம்பாக அடங்கி விடுவார். தங்க தமிழ்ச்செல்வனிடம் இனி விளக்கம் கேட்பதற்கு எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.