நாளை சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ள நிலையில் அப்பகுதியில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் மகரஜோதி தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்ட நிலையில் தினசரி ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நாளை நடைபெற உள்ள மகரஜோதி தரிசனத்தை காண ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர்.
இதனால் சபரிமலை மற்றும் அதற்கு செல்லும் பாதைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இன்றும், நாளையில் சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் புக் செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என கூறப்பட்டுள்ளது.
மேலும் நாளை காலை 7 மணியிலிருந்து நிலக்கல் பகுதியில் போக்குவரத்திற்கு கட்டுப்பாடு விதிக்கபட்டுள்ளது. பம்பை வரையிலான போக்குவரத்து நாளை காலை 10 மணியுடன் மூடப்படும், மதியம் 12 மணிக்கு மேல் பம்பையிலிருந்து சன்னிதானத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகரஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் பலரும் சபரிமலை செல்லும் பாதைகளில் முகாமிட்டுள்ளனர்.
Edit by Prasanth.K