சிவகங்கை அரசு கல்லூரியில் பயங்கரம்: மாணவனை சரமாரியாக வெட்டிய கும்பல்

Webdunia
செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (18:34 IST)
சிவகங்கை மன்னர்  துரைசிங்கம் அரசுக் கலைக்கல்லூரியில்  3பேர் கும்பல் , மாணவன் ஒருவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.
 



சிவகங்கை மன்னர்  துரைசிங்கம் அரசுக் கலைக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு BA பயிலும் பில்லூரை சேர்ந்த அஜித்ராஜா என்ற மாணவரை கல்லூரி வளாகத்தில் புகுந்த 3 பேர்  கும்பல் அரிவாளால் வெட்டினார்கள்.
 
இதில் படுகாயமடைந்த மாணவன் அஜித்ராஜா, சிவகங்கை அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு  சிகிச்சை அளிக்கபட்டு வருகின்றது. இந்த சம்பவம் குறித்து சிவகங்கை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்