தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்; புதிய வழிகாட்டு முறைகள்!

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (09:28 IST)
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான திருத்திய வழிகாட்டு முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரம் ஆசிரியர்களுக்கான பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்ப சமீபத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முறையாக வழிகாட்டு முறை இல்லாமல் விருப்பப்பட்டவர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் அபாயம் உள்ளதாக வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தகுதி அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் வண்ணம் திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட இடைக்கால ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தற்போது பள்ளிக்கல்வித்துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி தேவையான கல்வி தகுதியை தற்காலிக ஆசிரியர் பெற்றிருத்தல் அவசியம். தற்காலிக ஆசிரியர் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்களை வகுப்பறையில் பாடம் நடத்த சொல்லி அதன் அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு பிறகான காலக்கட்டத்தில் ஆசிரியரின் பணிகள் திருப்தி அளிக்காவிட்டால் டிஸ்மிஸ் செய்யப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்