கூடலூரில் பூனைக்குட்டி என நினைத்து சிறுத்தைக் குட்டியை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கொண்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புலம்பட்டியில் தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் ஒரு அழகான பூனைக்குட்டியை கண்ட அவர்கள் அதை வளர்க்கலாம் என எடுத்து வந்துள்ளனர்.
அதை கண்ட சக தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்ததுடன், அது பூனைக்குட்டி இல்லையென்றும், சிறுத்தைக்குட்டி என்றும் தெரிவித்துள்ளனர். உடனடியாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
அங்கு வந்த வன அதிகாரிகள் சிறுத்தை குட்டியை மீண்டும் அது இருந்த இடத்திலேயே விட்டதுடன், அதை விட்டு சென்ற தாய் சிறுத்தை அதை எடுக்க அங்கு வரலாம் என்பதால் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.