ஞாயிறு முழு ஊரடங்கு எதிரொலி... நாளை டாஸ்மாக் மூடல்!

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (14:00 IST)
கொரோனா பரவல் காரணமாக நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் டாஸ்மாக்கும் மூடப்படுவதாக அறிவிப்பு. 

 
தமிழகத்தில் டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு கடந்த 6 ஆம் தேதி முதலாய் அமலில் இருக்கிறது. மேலும் கடந்த சில வாரங்களாக வார இறுதியான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
 
அந்த வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 23 (நாளை) அன்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த வார ஊரடங்கில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளே இந்த ஊரடங்கிலும் பின்பற்றப்படுகின்றன என தெரிவித்துள்ளார். 
 
எனவே முழு ஊரடங்கை முன்னிட்டு தமிழ்நாட்டில் நாளை டாஸ்மாக் கடைகள், பார்கள் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். கொரோனா பரவல் காரணமாக நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் டாஸ்மாக்கும் மூடப்படுவதாக அறிவிப்பு. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்